கோலாலம்பூர், செப்டம்பர்.12
கடந்த செப்டம்பர் முதல் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் லிமோ வாடகைக் கார்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் அழுகிய சடலம் தொடர்பில் இதுவரை 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேஎல்ஐஏ போலீஸ் நிலையத் தலைவர் ஏசிபி அஸ்மான் ஷாரியாட் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் உடல் முற்றாக அழுகி விட்டதால் அவரை அடையாளம் காண இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அந்தப் பெண்ணின் உடலில் 4 வெட்டுக்காயங்கள் இருப்பது செர்டாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாம அவர் குறிப்பிட்டார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பெண்ணின் மரணம் கொலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் மரணம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.








