சபா, சரவா மாநிலங்களில் அதிகாரத்துவ விவகாரங்களில் ஆங்கிலமொழி தொடர்ந்து பயன்படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் இவோன் பெனெடிக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செஷன்ஸ் நீதிமன்றம், மாநில சட்டமன்றம் உட்பட பலதரப்பட்ட அதிகாரத்துவ பணிகளில் ஆங்கில மொழி பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கும் சபா, சரவா அரசியலமைப்புச்சட்டத்தை மேற்கோள்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








