கோலாலம்பூர், ஜூலை.16-
மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 12 வெளிநாட்டவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் ஒரு ஹோம்ஸ்தேய் வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் இந்த 12 பேரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மனித கடத்தல் தொடர்பான D3 ( டி த்ரி ) பிரிவுத் தலைவர் சோஃபியான் சந்தோங் தெரிவித்தார்.
உளவுத்துறை மூலம் கிடைக்கப் பெற்றத் தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 9 மணிக்கு அந்த வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட 22 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 12 பேரில், மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் கேங் ரோனி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அவர் அடையாளம் கூறினார்.








