4 கோடியே 44 லட்சம் வெள்ளி மதிப்புள்ள இரண்டு நீர் விநியோகிப்புத்திட்டம் தொடர்பில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அரசு இலாகாவின் இயக்குநர் ஒருவர் உட்பட நால்வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. .
இயக்குநருடன் அரசாங்க பணியாளர் ஒருவர், நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் நேற்று இரவு 7.30 மணிக்கு சரவா மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.








