- முன்னாள் எம்.பி. கூறுகிறார்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தாங்கள் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொண்டுள்ள ஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கையை, ஓர் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பானின் முன்னாள் பாங்கி எம்.பி. ஒங் கியாங் மிங் கேட்டுக்கொண்டுள்ள்ளார்.
மூடா கட்சியின் ஆதரவினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த ஒற்றுமை அரசாங்கம், கடந்த பத்து மாத காலத்தில் எத்தகைய ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுள்ளது, தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழப்பது மூலம் அதன் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவை எவ்வாறு இருக்கும் என்று மக்கள் நேரடியாக பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
தவிர மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் முன்மொழியப்பட்ட போது, எந்தெந்த திட்டங்கள் முடியாது, அமல்படுத்த இயலாது என்று கூறி, ஒற்றுமை அரசாங்கம் தட்டிக் கழித்து, பிடிவாதம் பிடித்ததோ, அந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கும் எதிர்க்கட்சியினருடன் இணைந்து வேலை செய்வதற்கும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதனுடன் கருத்திணக்க ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் மூடா கட்சியின் இந்த நடவடிக்கையின் மூலம் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒரு கடிவாளம் பூட்டப்பட்டுள்ளது என்று ஒங் கியாங் மிங் கூறுகிறார்.








