May 20, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பினாங்கு அரசுத்துறை ஊழியர்களுக்கு டிசம்பரில் அரை மாத போனஸ் !

Share:

பினாங்கு மாநில பணி புரியும் மூவாயிரத்து 867 அரசுத் துறை ஊழியர்களுக்கு இவ்வாண்டு டிசம்பரில் அரை மாத ஊதியம், அல்லது குறைந்தது ஆயிரம் வெள்ளியை போனஸ் வழங்கப்பட உள்ளது என அம்மாநில முதலமைச்சர் சொன் கொன் யொ அறிவித்தார்.

மாநிலத்திற்காக சேவையாற்றி வரும் அரசுத் துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த போனஸ் வழங்கப்படுவதாக சொன் கொன் யொ கூறினார்,

இந்த ஊக்குவிப்புத் தொகையை டிசம்பர் மாதத்தில் பகிர்ந்தளிக்கப்ப்ட உள்ளது.

அவர்கள் மட்டும் இன்றி, சமயப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியார் சீனப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 300 வெள்ளி ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட உள்ளது.

Related News