கோலாலம்பூர், அக்டோபர்.13-
மாணவர்களிடையே பரவி வரும் இன்ஃபுளுவென்ஸா தொற்றுநோய் காரணமாக, வீட்டு அடிப்படையிலான கற்றலைச் செயல்படுத்துமாறு 34 மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்கல்லூரிகளைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு இன்ஃபுளுவென்ஸா காய்ச்சல் பரவியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில், மாவட்ட சுகாதாரத் துறை அனுமதி வழங்கும் வரை தாங்கள் காத்திருக்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், செயல்பாட்டில் இருக்கும் மற்ற கல்வி நிலையங்களில் கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்டு, சுகாதாரம் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.








