Oct 17, 2026
Thisaigal NewsYouTube

லோரியுடன் மோதியதில் காரோட்டி மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோரியுடன் மோதியதில் காரோட்டி மரணம்

ஜொகூர், அக்டோபர் 18-

காரோட்டி ஒருவர், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் ஜோகூர்பாரு,உலு திரம், ஜாலான் சுங்கை திரம், பத்து 25 இல் நிகழ்ந்தது.

43 வயதுடைய அந்த காரோட்டி, கம்போங் சுங்கை திரம் - மை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக செரி ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்த காரோட்டி எதிர்திசையில் நுழைந்து, எதிரே வந்த லோரியில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →