Jul 5, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையைக் கொன்ற குற்றத்திற்குத் தந்தைக்கு 30 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

குழந்தையைக் கொன்ற குற்றத்திற்குத் தந்தைக்கு 30 ஆண்டு சிறை

Share:

கோத்தா கினபாலு, ஜூன்.27-

தனது ஒன்பது மாதப் பெண் குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக முன்னாள் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு கூட்டரசு நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

கோத்தா கினபாலுவில் நடைபெற்ற அமர்வில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம், அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றிக் கண்டுள்ளதாகத் தீர்ப்பில் தெரிவித்தார்.

மைடின் இப்னுஹாஷிம் என்ற அந்த நபர் அந்தக் குழந்தைக்குக் கடும் காயங்களை விளைவித்து, நோக்கத்துடன் இந்த கொலையைப் புரிந்துள்ளார் என்று அவர் தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி லபுவான், கம்போங் கெர்சிக் லாமாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தனது மகள் நூருல் ஷாஃபிகா என்பவரை அந்த நபர் கொன்றதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News