Feb 6, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டை முன்னிட்டு 4 நாட்கள் கனரக சரக்கு வாகனங்களுக்குத் தடை - ஜேபிஜே அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு 4 நாட்கள் கனரக சரக்கு வாகனங்களுக்குத் தடை - ஜேபிஜே அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.06-

சீனப் புத்தாண்டு காலக்கட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளின் அபாயத்தைக் கட்டுப்படுத்தவும், சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, கனரக சரக்கு வாகனங்களுக்கு நான்கு நாட்கள் தடையை அமல்படுத்தவுள்ளது.

இந்தத் தடையானது வரும் பிப்ரவரி 14 முதல் 15-ஆம் தேதி வரையிலும், பின்னர், பிப்ரவரி 21 முதல் 22-ஆம் தேதி வரையிலும் அமல்படுத்தப்படும் என்று ஜேபிஜே தலைமை இயக்குநர் ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், அனைத்து கனரக வாகன ஓட்டுநர்களும் இந்த அறிவுறுத்தலுக்கு இணங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரகால நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களைத் தவிர, 7,500 கிலோவுக்கு மேற்பட்ட சரக்கு லாரிகளுக்கு இத்தடையானது விதிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், பண்டிகைக் காலங்களில் சாலைப் பயனர்கள், போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து, தங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்து கொள்ளுமாறும் ஜேபிஜே வலியுறுத்தியுள்ளது.

Related News