Oct 3, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி வியாபாரத்துக்கு இந்திய தொழில்முனைவோருக்கு ரிங்கிட் 3 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி வியாபாரத்துக்கு இந்திய தொழில்முனைவோருக்கு ரிங்கிட் 3 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்

வரும் நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில்முனைவோருக்கு கூடுதல் மூலதனம் கிடைக்கும் வகையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு 3 கோடி ரிங்கிட் மதிப்பிலான சிறப்பு நிதித் திட்டத்தை தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் இன்று அறிவித்துள்ளார்.

பெர்காட் தீபாவளி எனப்படும் இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் அதிகபட்சம் ரிங்கிட் 30 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும். ஆண்டுக்கு 3 விழுக்காடு லாப விகிதத்துடன் வழங்கப்படும் இந்த நிதியை 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

பினாங்கு மாநில அளவிலான 2026ஆம் ஆண்டு மடானி கித்தா நிகழ்ச்சியில் இத்திட்டத்தை அறிவித்த ஸ்டீவன் சிம், தீபாவளி காலம் பல இந்திய வியாபாரிகளுக்கு ஆண்டின் முக்கியமான விற்பனை காலமாக இருப்பதால், பொருள்களின் கையிருப்பை அதிகரிக்கவும் வணிகத் தயாரிப்புகளை மேற்கொள்ளவும் குறுகிய காலத்தில் மூலதனம் கிடைப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

உணவு, பானங்கள், ஆடைகள் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் சிறு வியாபாரிகள், தீபாவளியை முன்னிட்டு கூடுதல் பொருள்களை வாங்குவதற்கான சுழல் மூலதனமாக இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இன்று அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். தெக்குன் நேஷனல் இணையவழி முறையிலும் நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளிலும் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 65 வயதுக்குட்பட்ட மலேசிய இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →