Mar 29, 2026
Thisaigal NewsYouTube
கோவில் முன்புறம் பாதுகாவலர் வெட்டிக் கொல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

கோவில் முன்புறம் பாதுகாவலர் வெட்டிக் கொல்லப்பட்டார்

Share:

கோலாலம்பூர், மே.26-

நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதுகாவலர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் கோலாலம்பூர், செந்தூல் வட்டாரத்தில் தாமான் இந்தான் பைடுரியில் நிகழ்ந்தது.

கோவில் முன்புறம் நண்பர்களுடன் அமர்ந்து குடித்துக் கொண்டு இருந்த வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் முகமட் ஸாஹாரி தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்வதற்கு முன்பு, கொலையுண்ட நபருக்கும், அவரின் நண்பர்களில் ஒருவருக்கும், கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, 44 வயதுடைய அந்த பாதுகாவலர்,ஆழமான வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார். அம்புலன்ஸ் வண்டி வருவதற்குள் அவர் உயிர் பிரிந்தது.

சவப்பரிசோதனைக்காக அந்த பாதுகாவலரின் உடல், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் சவக்கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அஹ்மாட் ஸாஹாரி தெரிவித்தார்.

Related News