கூலாய், செப்டம்பர்.@5-
ஜோகூர், கூலாய், பத்து 19- ( பத்து செம்பிலான் பிளாசில் ) உள்ள ஒரு கோப்பிதியாம் உணவகத்தில் ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் அன்றிரவு 7.30 மணியளவில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








