கடந்த வெள்ளிக்கிழமை, குவாந்தான், pantai cempaka கடற்கரையில் தமது 4 நண்பர்களுடன் உல்லாசமாக குளித்துக்கொண்டிருந்த 15 வயது மாணவரான Nazrul Aimi Shah Kamarul Bahri நீரில் மூழ்கி மாண்டதை அடுத்து, அம்மாணவனின் சடலம் சனிக்கிழமை இரவு 11.50 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் துறைத் தலைவர், உதவி ஆணையர் Wan Mohd Zahari Wan Busu கூறினார்.
அம்மாணவன், நீரில் மூழ்கி காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்திலிருந்து, சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அவரின் உடல் மீட்கப்பட்டது. மாணவனின் சடலம் மேல் நடவடிக்கைக்காக, குவாந்தான் Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு (HTAA) கொண்டுச் செல்லப்பட்டது.








