கோலாலம்பூர், ஜனவரி.09-
2026 புதிய கல்வியாண்டு, வரும் ஜனவரி 11,12 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் தொடங்கவிருக்கும் வேளையில் பள்ளிப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிப் பேருந்து கட்டணத்திற்கான காப்புறுதி கட்டணம், பேருந்து ஓட்டுநர்களுக்கான சம்பளம், மற்றும் வாகன உபரிப் பாகங்களின் விலை முதலியவை உயர்த்திருப்பதைத் தொடர்ந்து பள்ளி பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாக மலேசிய பள்ளி பேருந்து நடத்துநர்கள் சங்களின் சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.
எனினும் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்வது சம்பந்தப்பட்ட பள்ளி பேருந்து நிறுவனங்களைப் பொறுத்ததாகும் என்று அந்தச் சம்மேளனத்தின் தலைவர் அமாலி முனிஃப் ரஹ்மாட் தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிப் பேருந்து கட்டணம் மீதான கண்காணிப்பில் கட்டுப்பாடுயில்லை என்று அரசாங்கம் அறிவித்த போதிலும் கூடியபட்ச கட்டண வரம்பை நிர்ணயித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பள்ளிப் பேருந்து நிறுவனங்கள் சில, செலவினத்தைத் தாங்களே ஏற்பதாக முடிவு செய்தாலும் இன்னும் சிலர் கட்டணத்தை உயர்த்துவதற்கான சாத்தியம் இருப்பதை அவர் மறுக்கவில்லை.








