Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்

Share:
கோலாலம்பூர்,ஜுலை 10-

கெராக் இன்சான் ஜெமிலாங் பயிற்சி மானியத்தில் RM51.7 மில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்.

இது மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) பற்றிய தேசிய தணிக்கைத் துறையின் அறிக்கையால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், 315 பயிற்சி வழங்குநர்களுக்கு நிதி விநியோகிக்கப்பட்டது என்றும் ஒரு நிறுவனத்திற்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

3,726 பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு RM51.7 மில்லியன் செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இது தவறான புரிதல் என்றும். உண்மையில், இந்த நிதியில் 315 பயிற்சி வழங்குநர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்" என்றும் அவர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இரண்டாவதாக, 3,726 பங்கேற்பாளர்களில் 84 விழுக்காடு அதாவது தோராயமாக 3,132 பங்கேற்பாளர்கள், ஒரு வருடத்திற்குள் இரண்டு முதல் மூன்று முறை மட்டுமே தங்கள் படிப்புகளை மீண்டும் செய்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

பங்கேற்பாளர்கள் எனக் கூறப்படும் 234 பேர் ஒரே மாதிரியான பெயர்கள் மற்றும் அடையாள எண்களைப் பதிவு செய்த சந்தேகத்திற்குரியவர்கள் என்று பொதுக் கணக்கதிறிக்கை குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களின் நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிம் கூறினார்.

பொதுக் கணக்குக் குழு மற்றும் தணிக்கைத் துறையின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து HRD Corp -இன் சுயாதீன தணிக்கையை நடத்துவதாக முன்னதாக மனிதவள அமைச்சு கூறியது.

மேலும், அனைத்து செயல்முறைகள் மற்றும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்ய மூன்றாம் தரப்பு தொழில்முறை தணிக்கையாளர் ஜூலை 31க்குள் நியமிக்கப்படுவார் என்று சிம் கூறினார்!

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்