Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பேராவில் வர்த்தகக் குறக்ச் செயல்கள் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பேராவில் வர்த்தகக் குறக்ச் செயல்கள் அதிகரிப்பு

Share:

பேரா மாநிலத்தில் கொமெர்ஷியல் க்ராய்ம் எனப்படும் வர்த்தகக் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதோடு அதன்பொருட்டு ஏற்பட்ட நட்டமும் 77 மில்லியன் வெள்ளி கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலல் லாவல் துறைத் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் பதிவு செய்யப்பட்டக் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 179 எனவும் கடந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் அவ்வெண்ணிக்கை 2 ஆயிரத்து 53 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒப்பிட்டுக் காட்டினார்.

மிக அதிகமாக இணையவழி விற்பனைகள், தொலைபேசி வழி மோசடிகள், முதலீடுகள், வேலை வாய்ப்புகள். கடன்கள் ஆகிய குற்றச் செயல்களே அதிகம் பதிவு செய்யப்பட்டவையாகும்.

இதன் அடிப்படையில் ஆயிரத்து 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முஹமாட் யுஸ்ரி, 4 இலக்க எண்கள் சூதாட்ட கும்பலையும் பேரா மாநில வர்த்தகக் குற்றச் செயல்கள் புலனாய்வுப் பிரிவு முறியடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவற்றைத் தடுக்கும் நோக்கில் 858 விழிப்புணர்வு நடவடிக்கைகளை பல்வேறு தளங்களில் தமது தரப்பு மேற்கொண்டிருந்தாலும் தொடந்து இவ்வாறான குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Related News