Dec 6, 2025
Thisaigal NewsYouTube
2026 இல் மின்னணு விலைப் பட்டியல் விரிவாக செயல்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

2026 இல் மின்னணு விலைப் பட்டியல் விரிவாக செயல்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.06-

மலேசியாவில் மின்னணு விலைப் பட்டியலான இ-இன்வோய்ஸ் முறை 2026 ஆம் ஆண்டு முதல் விரிவாகச் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வரி இணக்கத்தை மேம்படுத்தவும், வரி இழப்புகளைத் தடுக்கவும் இ-இன்வோய்ஸ் திட்டம் அவசியம் என்று அரசாங்கம் கருதுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு முதல் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கவலைகள் மற்றும் சுமைகளைக் கருத்தில் கொண்டு, கட்டாய இ-இன்வோய்ஸ் அமலாக்கத்திற்கான ஆண்டு வருவாய் அல்லது விற்பனை வரம்பை 5 லட்சம் ரிங்கிட்டிலிருந்து பத்து லட்சம் ரிங்கிட்டாக உயர்த்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சிறிய நிறுவனங்களுக்கு விலக்களிப்பு வழங்கப்படும். இதன் பொருள், ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான ஆண்டு வருவாய் கொண்ட மிகச் சிறிய நிறுவனங்கள் இத்திட்டத்தைக் கட்டாயமாகப் பின்பற்றத் தேவையில்லை என்று பிரதமர் விளக்கினார்.

Related News