Aug 12, 2026
Thisaigal NewsYouTube
மானிய டீசல் கொண்ட ஒன்பது வாகனங்கள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

மானிய டீசல் கொண்ட ஒன்பது வாகனங்கள் கைப்பற்றப்பட்டன

Share:

ஷா ஆலாம், மே.29-

சிலாங்கூர் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சும் சிலாங்கூர் காவல்துறையும் இணைந்து, மானிய டீசலைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு சட்டவிரோத வளாகத்தில் நேற்று சோதனை நடத்தின. இந்த சோதனையின் போது, 30 டன் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி, டீசல் கொண்ட IBC கொள்கலன்களுடன் மாற்றியமைக்கப்பட்ட நான்கு கேன்வாஸ் லாரிகள் உட்பட ஒன்பது வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக அதன் சிலாங்கூர் மாநிலத் தலைமை இயக்குநர் முகமட் ஸுஹைரி பின் மாட் ராடே தெரிவித்தார். சுமார் 7 ஆயிரம் லிட்டர் டீசல், பம்ப் மோட்டார்கள் போன்ற கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது 30 முதல் 45 வயதுடைய ஐந்து மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related News

மானிய டீசல் கொண்ட ஒன்பது வாகனங்கள் கைப்பற்றப்பட்டன | Thisaigal News