ஷா ஆலாம், அக்டோபர்.23-
முறைகேடு புரிந்ததாக வங்கி அதிகாரி ஒருவர் மீண்டும் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 3 லட்சத்து 98 ஆயிரத்து நூறு ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக 43 வயது ஸெய்மி ஸானி ஒத்மான் என்ற அந்த வங்கி அதிகாரி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
கடன் பெறுவதற்கான தகுதி வரம்பு மீறிய தனிப்பட்ட கடன்கள் மீதான விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி பாங்கி, பண்டார் பாரு பாங்கியில் அவர் குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிராக மொத்தம் 104 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.








