கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
நாளை ஆகஸ்ட் 23 ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் காஸாவுடன் மலேசியப் பேரணி எனும் நிகழ்வையொட்டி மஸ்ஜிட் ஜாமேக் மற்றும் பசார் செனி ஆகிய நிலையங்களின் எல்.ஆர்.டி. ரயில் சேவை அதிகாலை ஒரு மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரேபிட் ரெயில் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








