Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான், பொருளாதார அமைச்சருக்கானப் பணியை மேற்கொள்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான், பொருளாதார அமைச்சருக்கானப் பணியை மேற்கொள்வார்

புத்ராஜெயா, ஜூன்.27-

இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான், பொருளாதார அமைச்சருக்கானப் பணியை மேற்கொள்வார். அவரின் பதவி நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சூல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்விவகாரத்தைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார அமைச்சராகப் பதவி வகித்து வந்த பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தமது பதவியை ராஜினாமா செய்து விட்டதைத் தொடர்ந்து, அவரின் பொறுப்பில் இருந்த பொருளாதார அமைச்சருக்கான பணிகளையும், கடமைகளையும் இனி அமீர் ஹம்ஸா செயல்படுத்துவார் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →