Jun 30, 2026
Thisaigal NewsYouTube
வரலாற்றுச் சாதனை: 53 கி.மீ. அல்ட்ரா மாரத்தான் ஓடி முடித்த மாற்றுத்திறனாளி வீராங்கனை
தற்போதைய செய்திகள்

வரலாற்றுச் சாதனை: 53 கி.மீ. அல்ட்ரா மாரத்தான் ஓடி முடித்த மாற்றுத்திறனாளி வீராங்கனை

Share:

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 18 வயது இளம் பெண் நூர் வாடிஹான் வீரா சுடெப்ஜா , 53 கிலோமீட்டர் தூர 'அல்ட்ரா மாரத்தான்' ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற 'வாட்டர்கேட் 24 ஹவர்” சிறப்பு ஓட்டத்தில் பங்கேற்ற அவர், 9 மணி நேரம் 46 நிமிடங்களில் இந்த இலக்கை எட்டினார். இச்சாதனையைப் பாராட்டி, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி முன்னிலையில் அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இது குறித்துப் பேசிய அவரது தந்தை வீரா சுடெப்ஜா, "இத்தகைய சிறப்புக் குழந்தைகளுக்குத் தகுந்த ஆதரவு வழங்கினால் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டவே இந்த முயற்சி," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது நூர் வாடிஹான் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் மூன்றாவது முறையாகும்.

Related News