Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கடப்பிதழைப் பெற ரோஸ்மாவுக்கு அனுமதி
தற்போதைய செய்திகள்

கடப்பிதழைப் பெற ரோஸ்மாவுக்கு அனுமதி

Share:

சிங்கப்பூரில் உள்ள தனது மகள் நூரியானா நஜ்வா மற்றும் அவரது மூத்த மகனின் குடும்பத்தினரை சந்திக்க, கடப்பிதழ் பெறுவதற்கான டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் ரின் விண்ணப்பத்தை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதித்தது.

டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ அகமது ஜைதி இப்ராஹிம் ஆகியோருடன்டத்தோ என்.பி.ரவீந்திரன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக, ரோஸ்மாவின் வழக்கறிஞர் டத்தோ ஜக்ஜித் சிங், இன்று முதல் வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை கடப்பிதழை தற்காலிகமாக திருப்பித் தருமாறு விண்ணப்பித்திருந்தார். அதன் விண்ணப்பம் ஜூன் 6 ஆம் தேதி முதல் ஜூலை 7 தேதி வரை இருந்தது. ஆனால் ஜூன் 6 கடந்துவிட்டதனால், விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Related News