Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கூலிமில் இப்போதைக்கு விமான நிலையம் இல்லை
தற்போதைய செய்திகள்

கூலிமில் இப்போதைக்கு விமான நிலையம் இல்லை

Share:

கெடா, கூலிமில் இப்போதைக்கு அனைத்துலக விமான நிலையத்தைக் நிர்மாணிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சு இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கூலிமில் அனைத்துலக விமான நிலையத்தை நிர்மணிப்பதற்கு பாஸ் கட்சி தலைமையிலான கெடா மாநில அரசாங்கம் முன்வைத்த பரிந்துரை சாத்தியமானதாக இல்லை.

தற்போதைக்கு கெடா மாநிலத்தின் தேவைகளை பினாங்கு அனைத்துலக விமான நிலையம் பூர்த்தி செய்ய முடியும்.
பினாங்கு விமான நிலையம் அதிகபட்ச பயணிகள் கொள்ளளவைத் தாண்டினால் மட்டுமே கூலிமில் அனைத்துலக விமான நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலிக்கும் என்று போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது

Related News