அரச மலேசிய போலீஸ் படையில் குற்றப்புலனாய்வுத் துறையில் உள்ள அனைத்து போலீஸ்காரர்களும் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. இயக்குநர் டத்தோ செரி முஹமாட் ஷுஹைலி முஹமாட் சயின் தெரிவித்துள்ளார்.
தம்முடைய பார்வையில் உள்ள அனைத்து போலீஸ்காரர்களும் தங்கள் சொத்து விவரஙகளை அறிவிக்காமல் இருப்பதற்கு காரணமே இல்லை என்று தெரிவித்த முஹமாட் ஷுஹைலி , இந்த நோட்டீஸ் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
போலீஸ்காரர்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்பது புதிய விஷயம் அல்ல. போலீஸ் படையின் விதிமுறையிலேயே அந்த நிபந்தனை இருப்பதாக அவர் தெரிவித்தார். அரச மலேசிய போலீஸ் படையில், குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதற்கு தலைமையேற்றுள்ள குற்றப்புலனாய்வுத்துறை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் சிக்கி விடாமல் கைசுத்தமாக இருப்பதை உறுதி செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.








