அந்நிய நாட்டைச் சேர்ந்த மாதுவை மடக்கி கொள்ளையடித்துடன், அவரின் கடப்பிதழைப் பறித்துக்கொண்டதாக லான்ஸ் காப்ரல் அந்தஸ்தைக் கொண்ட இரண்டு போலீஸ்காரர்களுக்கு எதிராக, மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
31 வயதுடைய தி.எஸ். பிரவின் மற்றும் முகமட் சஃப்ரி இட்ரீஸ் என்ற அந்த இரு போலீஸ்காரர்கள், நீதிபதி டர்மா ஃபிக்ரீ அபு அடாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
அந்த இரு போலீஸ்காரர்களும், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, இரவு 10 மணியளவில், மலாக்கா, பிலாஸா வர்த்தகத் தளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசிய மாதுவுக்குச் சொந்தமான கைச்சங்கிலி, கடப்பிதழ் மற்றும் ஹொங் லியோங் வங்கியின் ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை இரு போலீஸ்காரர்களும் களவாடியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 395 பிரிவின் கீழ் அந்த இரு போலீஸ்காரர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


