Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பதவியை இழக்கும் நிலைக்கு முகைதீன் தள்ளப்படலாம்
தற்போதைய செய்திகள்

பதவியை இழக்கும் நிலைக்கு முகைதீன் தள்ளப்படலாம்

Share:

பாஸ் கட்சி தலைமையிலான நான்கு மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி மலர்வதைத் தொடர்ந்து அவற்றின் ஆலோசகராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நியமிக்கப்பட்டு இருப்பது மூலம் அந்த கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் பதவி ஆட்டம் காணலாம் என்று சபா முள்ளாள் முதலமைச்சர் டத்தோ டாக்டர் சலே சைட் கெருவாக் ஆருடன் கூறியுள்ளார்.

முகைதீனை விட துன் மகாதீரை பாஸ் கட்சி அதிகமாக நம்புவதால் அந்த கூட்டணியில் முகைதீனின் அந்தஸ்து குறையலாம் என்று டாக்டர் சலே சைட் குறிப்பிட்டுள்ளார.

எஸ்.ஜி 4 என்ற 4 நான்கு மாநிலங்களுக்கான அரசாங்கம் என்ற திட்டத்தில் துன் மகாதீரை ஆலோசகராக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நியமித்துள்ளார். அதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பாக துன் மகாதீருடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வுக்கு முகைதீனுக்கு ஹாடி அவாங் அழைப்பு விடுக்கவில்லை. இதன் மூலம் முகைதீனின் முக்கியத்துவம் குறைந்து வருவதாக டாக்டர் சலெ சைட் தெரிவித்துள்ளார்.

Related News