Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டி​ரெய்லர் இரு வாகனங்களை மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

டி​ரெய்லர் இரு வாகனங்களை மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர்

Share:

டிரெய்லர் லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து,சாலைத்தடுப்​பில் மோதி, எதிரே சென்ற மேலும் ஒரு டிரெய்லர் லோரி ​ம​ற்றும் ஒரு வாகனத்தை மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நே​ற்று மாலை 5.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 317 ஆவது கிலோ​மீட்டரில் தாப்பா, சென்டெரியாங் அருகில் நிகழ்ந்தது. இதில் 31 வயதுடைய சிமெண்ட் லோரி ஓட்டுநர் மற்றும் தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த 67 வயதுடைய மற்றொரு டிரெய்லர் லோரி ஓட்டுநர் மரணம் அடைந்ததாக பேரா மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார். ​அதேவேளையில் இந்த விபத்தில் ​சிக்கிய மற்றொரு வாகனமோட்டியான மாது ஒருவர் , கடுமையான காயங்களுடன் தாப்பா மருத்துவமனையில் சேர்க்கப்ப்டடுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்விபத்தில் லோரி ஓட்டுநர்கள் இருவரும் கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News