லங்காவி, நவம்பர்.20-
லங்காவி கடலில் ஆபத்தை விளைவிக்கும் Box ஜெல்லி மீன்கள் இருப்பதை கெடா மாநில மீன்வளத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக அவை லங்காவி கடலில் மிதமான அளவில் காணப்படுவதாக மாநில மீன்வளத்துறை இயக்குநர் சுக்ரி டெரிஸ் தெரிவித்துள்ளார்.
என்றாலும், கடல் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களை முற்றிலும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், மிதமான அளவில் இருக்கும் ஜெல்லி மீன்கள் கூட ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஜெல்லி மீன்களின் அபாயம் குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படவுள்ளன.
இதனிடையே, நேற்று லங்காவியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த ரஷ்ய தம்பதியரின் இரண்டு வயது ஆண் குழந்தை ஜெல்லி மீன் கடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.








