Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வளமான இலக்கவியல் தொழில்நுட்ப எதிர்காலத்துக்கு இலக்கவியல் மீதான நம்பகத்தன்மை அவசியம் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ
தற்போதைய செய்திகள்

வளமான இலக்கவியல் தொழில்நுட்ப எதிர்காலத்துக்கு இலக்கவியல் மீதான நம்பகத்தன்மை அவசியம் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

இலக்கவியல் தொழில்நுட்ப நம்பகத்தன்மை என்பது இலக்கவியல் தொழில்நுட்ப உருமாற்றத்திற்கான அஸ்திவாரம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்துள்ளார். சீனா ஷாங்காயில் நடைபெற்ற ஆசியான்- சீனா இலக்கவியல் கூட்டுறவு மன்றத்தில், பயனுள்ள மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலக்கவியல் மாற்றத்திற்கு நம்பிக்கையே அடிப்படையாகும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மலேசியா, ஆசியான் வட்டாரத்தில் இலக்கவியல் தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாக விளங்க முற்படும் நிலையில் நம்பகத்தன்மை என்பது இலக்கவியல் முன்னேற்றத்திற்கான உத்திகளைச் செயல்படுத்தவும், பிற நாடுகளுடனான கூட்டுறவை வழியமைக்கவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

வளர்ந்து வரும் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுயமாக இயங்குவதோடு மட்டும் அல்லாமல், கொடுக்கப்பட்ட பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பதோடு, சுயமாக முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. அதோடு பொதுச் சேவைத் துறையிலும், தொழில்துறையிலும் பெரும் புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றது என்பதை மறுக்க இயலாது. இருந்தாலும் கூட, பாதுகாப்பாக, நெறிமுறைகளுக்கு உட்பட்டு, சமூக விழுமியங்களுடன் ஒத்தியங்கும் வகையில் செயல்படுகிறது என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தால் மட்டுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வெற்றி சாத்தியமாகும் எனவும் அமைச்சர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) 2030 ஆம் ஆண்டுக்குள் உலகப் பொருளாதாரத்திற்கு 17.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளை மாற்றியமைக்கும்.

ஆசியான் மாநாட்டை மலேசியா தலைமை ஏற்கும் நிலையில், ஆசியான் வட்டார நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு மலேசியா தலைமையேற்கும். இதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு (AI) ஆட்சிமுறை, நெறிமுறைகள் மற்றும் எல்லை தாண்டிய கண்டுபிடிப்புகளுக்கான பகிரப்பட்ட தரநிலைகளை மேம்படுத்தும் ஒரு தளமாக ஆசிய ஏஐ பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க மலேசியா தகுந்த முயற்சிகளை முன்னெடுக்கும் என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

Related News