Apr 3, 2026
Thisaigal NewsYouTube
சிகமாட்டில்  கோர விபத்து: போதைப்பொருள் பயன்படுத்திய டிரெய்லர் ஓட்டுநரால் 3 பேர் பலி
தற்போதைய செய்திகள்

சிகமாட்டில் கோர விபத்து: போதைப்பொருள் பயன்படுத்திய டிரெய்லர் ஓட்டுநரால் 3 பேர் பலி

Share:

ஜோகூர்பாரு - சிரம்பான் சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய டிரெய்லர் ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெமாஸ் பாரு அருகே மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவேகமாக வந்த டிரெய்லர் ஒன்று, முன்னால் சென்ற வேனின் பின்பகுதியில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியதில் வேனில் இருந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து சிகமாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டிரெய்லர் ஓட்டுநரை கைது செய்து சோதனை செய்ததில், அவர் Methamphetamine எனும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. தற்போது அவர் மீது போதைப்பொருள் உட்கொண்டு மரணத்தை விளைவித்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாட் தெரிவித்தார்

Related News

1.3 பில்லியன் டாலர் இழப்பீடு: நஜிப்பின் மேல்முறையீட்டு மனு மே 7-ல் விசாரணை

1.3 பில்லியன் டாலர் இழப்பீடு: நஜிப்பின் மேல்முறையீட்டு மனு மே 7-ல் விசாரணை

ஜூன் மாதத்திற்குள் புதிய எதிர்க்கட்சித் தலைவர்: அப்துல் ஹாடி அவாங் தகவல்

ஜூன் மாதத்திற்குள் புதிய எதிர்க்கட்சித் தலைவர்: அப்துல் ஹாடி அவாங் தகவல்

மது போதையில் வாகனம் ஓட்டிய நபருக்கு 7 நாள் சிறை மற்றும் 10,000 ரிங்கிட் அபராதம்

மது போதையில் வாகனம் ஓட்டிய நபருக்கு 7 நாள் சிறை மற்றும் 10,000 ரிங்கிட் அபராதம்

மலேசியா பாதுகாப்பாக உள்ளது" - மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு இடையே போலீஸ் படைத் தலைவர் உறுதி

மலேசியா பாதுகாப்பாக உள்ளது" - மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு இடையே போலீஸ் படைத் தலைவர் உறுதி

மத்திய கிழக்கு பதற்றம்: மலேசிய ஏர்லைன்ஸ் லண்டனுக்கு கூடுதல் விமானங்களை இயக்குகிறது

மத்திய கிழக்கு பதற்றம்: மலேசிய ஏர்லைன்ஸ் லண்டனுக்கு கூடுதல் விமானங்களை இயக்குகிறது

சுற்றுச்சூழல் தலைமை இயக்குநர், துணை இயக்குநருக்கு எதிராக 1 லட்சத்து 21 ஆயிரம்  ரிங்கிட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

சுற்றுச்சூழல் தலைமை இயக்குநர், துணை இயக்குநருக்கு எதிராக 1 லட்சத்து 21 ஆயிரம் ரிங்கிட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு