ஜோகூர் பாரு, நவம்பர்.02-
காரினால் மோதப்பட்ட இரண்டு சிறார்கள் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.20 மணியளவில் ஜோகூர் பாரு, ஜாலான் ஆஸ்தின் ஹைட்ஸ் 7/7 இல் நிகழ்ந்தது.
இதில் 6 மற்றும் 9 வயது இரண்டு சிறார்கள் காயமுற்றதாக ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அஸ்ருல் ஹொய்ஷாம் செலாத்தான் தெரிவித்தார்.
தங்கள் தந்தை வியாபாரம் செய்யும் இடத்தில் உள்ள ஓர் உணவகத்தின் ஐந்தடியில் அந்த இரண்டு சிறார்களும் விளையாட்டிக் கொண்டு இருந்த போது, சாலையை விட்டு விலகிய கார், அந்தச் சிறார்களை மோதித் தள்ளியதாக அவர் குறிப்பிட்டார்.








