கோலாலம்பூர், நவம்பர்.10-
இன்று காலையில் பிலிப்பைன்ஸ், Vigan City-யில் நிலைக்கொண்டிருக்கும் மணிக்கு 129 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய Fung- Wong புயல் கண்டறிப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா ஆலோசனை வழிகாட்டலை வெளியிட்டுள்ளது.
Fung- Wong புயல் , சபா, கூடாட்டிலிருந்து வட கிழக்காக 1,196 கிலோமீட்டரில் 17.4 பாகையில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
Fung- Wong புயலின் நகர்ச்சி காரணமாக தென்சீனாக் கடலில் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசும். கடல் கொந்தளிப்பு ஏற்படும்.
இதன் தாக்கம் சிலாங்கூர் மாநிலத்தில் குறிப்பாக, சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட், சிப்பாங் மற்றும் நெகிரி செம்பிலானில் ஜெலுபு, சிரம்பான் ஆகிய பகுதிகளிலும், ஜோகூரில் மூவார், பத்து பஹாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாருவில் வானிலை மோசமாக இருக்கும் என மெட்மலேசியா எச்சரித்துள்ளது.








