May 21, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி, நிலைத்தன்மையற்ற சூழலை உருவாக்கலாம்
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி, நிலைத்தன்மையற்ற சூழலை உருவாக்கலாம்

Share:

ஜன.12
அரசாங்கத்தை வீழ்த்துதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் நாட்டை நிலைதன்மையற்ற சூழலை உருவாக்கிவிடும் என்று முன்னாள் னைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சர் தான் ஶ்ரீ ரஃபிடா அசிஸ் எச்சரித்துள்ளார்.

நாட்டின் நலனை முன்நிறுத்தி, நடப்பு அரசாங்கம் மேலும் நான்கு ஆண்டுகள் ஆட்சிசெய்து, தனது தவணைக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அம்னோ முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவியுமான ரபிடா அஸிஸ் கேட்டுக்கொண்டார்.

துபாய் நகர்வு என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தின் வாயிலாக நடப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சிகள் நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பான விவாதங்களும் பொதுவில் நடைபெற்று வருகிறது. பேரங்கள் பேசப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

எந்தவொரு முயற்சியாக இருப்பினும் நாடு மற்றும் மக்களின் நலனே மிக முக்கியம் என்று ரபிடா வலியுறுத்தினார்.

Related News

அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி, நிலைத்தன்மையற்ற சூழலை உரு... | Thisaigal News