Oct 10, 2026
Thisaigal NewsYouTube

லோரியின் பின்புறம் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோரியின் பின்புறம் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி

கோலாலம்பூர், ஜூன்.09-

லோரியின் பின்புறம் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், கடும் காயங்களுக்கு ஆளாகி மரணமுற்றார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர், டூத்தா – உலு கிளாங் நெடுஞ்சாலையின் 4 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் கோலாலம்பூரிலிருந்து கோம்பாக்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டு இருந்த 17 வயது ஆடவர் உயிரிழந்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →