Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அடுத்த சுற்றுக்கு முன்னேறொயுள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடுத்த சுற்றுக்கு முன்னேறொயுள்ளனர்

டிச. 11-

சீனாவின் Hangzhouவில் நடைபெற்ற BWF உலகக் கிண்ண பேட்மிண்டன் இறுதிப் போட்டியின் B குழுவின் முதல் ஆட்டத்தில், மலேசியாவின் முன்னணி கலப்பு இரட்டையர் இணையினர் Chen Tang Jie-Toh Ee Wei, மலேசியாவைச் சேர்ந்த மற்றோர் இணையினரான Goh Soon Huat-Shevon Lai Jemie யை வீழ்த்தி தங்களது அடுத்த சுற்றுக்கு முன்னேறொயுள்ளனர்.

உலகத் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் இந்த ஜோடி, முதல் செட்டில் தோல்வியடைந்தாலும், இரண்டாவது , மூன்றாவது செட்டுகளில் சிறப்பாக விளையாடி 50 நிமிடங்களில் 14க்கு 21, 21க்கு 10, 21க்கு 14 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியால் அவர்களுக்கு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தந்துள்ளது.
அவ்வாட்டத்திற்குப் பிறகு, Ee Wei கூறுகையில், முதல் செட்டில் தங்கள் வியூகங்கள் சரியாக இல்லை என்றாலும், இரண்டாவது, மூன்றாவது செட்டுகளில் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடி, அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அடுத்தடுத்த ஆட்டங்களில், Chen Tang Jie-Toh Ee Wei ஜோடி இந்தோனேசியாவின் Dejan Ferdinansyah-Gloria Emanuelle Widjaja ஜோடியை எதிர்கொள்ளும் நிலையில், Soon Huat-Shevon ஜோடி ஜப்பானின் Hiroki Midorikawa-Natsu Saito ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →