Aug 4, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருளை கடத்தியதாக நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருளை கடத்தியதாக நபர் மீது குற்றச்சாட்டு

Share:

ஹிரோயின், / மெதாம்பெத்தாமின் முதலிய போதைப்பொருட்களை கடத்தியதாக தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அரசு சாரா இயக்கம் ஒன்றின் தலைவர், ஜோகூர், மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

73 வயது மோகனதாஸ் பாஸ்கரன் என்ற அந்த நபர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் மூவார், ஜாலான் இப்ராஹிம் மில் உள்ள ஒரு வீட்டில் 109.56 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும், அதே இடத்தில் 80.40 கிராம் மெதாம்பெத்தாமின் போதைப்பொருளையும் கடத்தியதாக மோகனதாஸ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மோகனதாஸ் பாஸ்கரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News