Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா - தாய்லாந்து எல்லையைச் சட்டவிரோதமாகக் கடக்கும் போலி 'VIP'-க்கள் - வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது கிளந்தான் போலீஸ்!
தற்போதைய செய்திகள்

மலேசியா - தாய்லாந்து எல்லையைச் சட்டவிரோதமாகக் கடக்கும் போலி 'VIP'-க்கள் - வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது கிளந்தான் போலீஸ்!

Share:

கோத்தா பாரு, நவம்பர்.07-

மலேசியா - தாய்லாந்து எல்லையைச் சட்டபூர்வ ஆவணங்கள் ஏதுமின்றி கடக்க மலேசியர்களும், சில அரசு ஊழியர்களும், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த யுக்தியைப் போலீசார் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

ரந்தாவ் பஞ்சாங் ICQS சோதனைச் சாவடியில் உள்ள “VIP பாதை” வழியாக, ஆடம்பரக் கார்களில் செல்லும் சிலர் கைகளை அசைத்து விட்டு, எளிதாகத் தாய்லாந்திற்குச் சென்று வந்ததாக கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோர் பொழுதுபோக்கு மற்றும் வணிக நோக்கத்திற்காகத் தாய்லாந்துக்குச் சென்றதாகவும், சிலர் தங்களை அமலாக்க அதிகாரிகள் போல காட்டித் தப்பித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி எல்லைச் சட்டங்களை மீறுவோருக்கு எந்தவிதச் சலுகையும் அளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ள முகமட் யூசோஃப் மாமாட், சோதனை மையங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் சிலர், கனரக வாகனங்கள் செல்லும் பாதையைப் பயன்படுத்தி எல்லையைக் கடந்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், ரந்தாவ் பஞ்சாங் ICQS சோதனைச் சாவடி வழியாக, தாய்லாந்தில் இருந்து கிளந்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 8 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related News