சைபர்ஜெயா, செப்டம்பர்.08-
இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய சைபர் பாதுகாப்பு ஏஜென்சி, மலேசியாவில் முதலாவது வாகனத் தடயவியல் சோதனைக் கூடத்தைத் திறந்துள்ளது.
வாகனங்கள் மற்றும் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான புலன் விசாரணைக்காக இந்த முதலாவது சோதனைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் சம்பந்தப்பட்ட கடத்தல், மனித வர்த்தகம், எல்லை தாண்டிய குற்றச்செயல்கள் முதலியவற்றை விரிவான விசாரணை செய்வதற்கான ஆற்றலை இந்தத் தடயவியல் சோதனைக் கூடம் கொண்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
ஒரு சம்பவம் எப்படி நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்கு மலேசியாவின் இந்த முதலாவது வாகனச் சோதனைக் கூடம் பேருதவியாக இருக்கும் என்ற செய்தியாளர்களிடம் பேசும் போது கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.








