Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஜுலை முதல் தேதியிலிருந்து ஹோட்டல் கட்டணங்கள் விலை உயரலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜுலை முதல் தேதியிலிருந்து ஹோட்டல் கட்டணங்கள் விலை உயரலாம்

கோலாலம்பூர், ஜூன்.28-

வரும் ஜுலை முதல் தேதியிலிருந்து ஹோட்டல் கட்டணங்கள் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜுலை மாதத்திலிருந்து மின்சார விநியோகத்திற்கான புதிய கட்டணம் அறிமுகம் மற்றும் எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி அமலாக்கத்தினால் ஹோட்டல் துறையினர் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஹோட்டல் கட்டணத்தின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எஸ்எஸ்டி வரி ஆகியவற்றினால் ஹோட்டல் பராமரிப்பு செலவினம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில ஹோட்டல் நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் ஹாஸிஸ் ஹசான் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு அண்மையில்தான் குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரிங்கிட்டாக ஹோட்டல் துறையினர் உயர்த்தியுள்ள வேளையில் தற்போது மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எஸ்எஸ்டி வரி தங்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைச் சமாளிக்க ஹோட்டல் கட்டண விலையை உயர்த்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →