Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் காரைச் செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் காரைச் செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.28-

பெட்டாலிங் ஜெயாவில் நேற்று போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் தமது காரைச் செலுத்தி, வாகனங்களுடன் விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை 11.28 மணியளவில், ஜாலான் டத்தோ அபு பாக்கார் 16/1 சாலையில் நடந்த இச்சம்பவத்தின் போது, சிவப்பு நிற ஹாண்டா சிஆர்வி காரை போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் செலுத்திய அந்நபர், அவ்வழியே வந்த பல வாகனங்களுடன் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இச்சம்பவத்தில் விபத்திற்குள்ளான வாகனங்களில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்நிலையில், அந்த சிவப்பு நிற ஹாண்டா சிஆர்சி காரைச் செலுத்திய உள்ளூர் ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுடின் பின் மாமாட் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-ன் கீழ், அந்நபர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளதாகவும் ஷம்சுடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்