டுவிட்டர் மூலம் தமக்கு அறிமுகமான 44 வயது ஆடவர் தம்மிடம் 18 ஆயிரத்து 800 வெள்ளியை பெற்று தலைமறைவாகி விட்டதாக பெண் புகைப்படக் காரர் ஒருவர் போலிசில் புகார் செய்துள்ளார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிமுகமான அந்த நபர் சரவாக்கில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிவதாகக் கூறி அந்த பெண் புகைப்படக் கலைஞரை மயக்கி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் அ.அன்பலகன் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி குவாந்தானில் உள்ள செராத்திங்கில் விடுமுறை கழிப்பதற்கு தாங்கள் இருவரும் சென்றிருந்தபோது, சம்பந்தப்பட்ட நபர் பொய்யர் என்று தெரிய வந்ததுடன் அந்த நபர் தம்மிடம் இருந்து 18 ஆயிரம் வெள்ளியை ஏமாற்றி விட்டதாக 36 வயதுடைய அந்தப் பெண் போலிசில் புகார் செய்திருப்பதாக அன்பழகன் மேலும் கூறினார்.








