லபுவான், ஆகஸ்ட்.16-
தேசிய அளவிலான 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமை வாரம், சபாவில் கொண்டாடப்படும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மடானி அரசாங்கத்தின் ஒற்றுமைத் திட்டத்தின் கீழ் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விதைக்கும் வாரமாக சபாவில் நடத்தப்படும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.
மலேசிய மக்களிடையே பல்வேறு சம்பிரதாயங்கள், கலாச்சாரங்களை மக்கள் புரிந்து கொள்ளவும், அவற்றைப் போற்றவும், ஒருமைப்பாட்டை விதைக்கவும் தேசிய அளவிலான ஒற்றுமை வாரம் ஒரு தளமாக அமையும் என்று அமைச்சர் விளக்கினார்.








