நாட்டின் முன்னாள் பிரதமரும், காபோங்கான் கெராக்கான் டானா ஆயர் கட்சியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவிப்பு விடுத்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு பெர்சத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டடு 2020-ல் பெஜுவாங் கட்சியைத் தொடங்கினார். பின் அதிலிருந்து பின்வாங்கி கொண்டப்பின்காபோங்கான் கெராக்கான் டானா ஆயருடன் இணைந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தான் காபோங்கான் கெராக்கான் டானா ஆயரிலிருந்து விலகி , மாலாய்க்காரர்களை ஒற்றுமைப் படுத்தில் நோக்கில் மலாய் பிரகடனத்தில் முழு கவனம் செலுத்த போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த தேர்தல் காலத்தில், காபோங்கான் கெராக்கான் டானா ஆயர் பல இடங்களில் தோல்வி கண்டது. இந்த முடிவுகள், மலாய்காரர்கள் தங்களின் அரசியல் சக்தியை இழந்து வருவதைப் புலப்படுவதாக மகாதீர் தெரிவித்தார்.
தொடர்ந்து, பாஸ் கட்சியும் கெடா மந்திரி பெசாரும் மலாய் பிரகடனத்தில் ஆதரவு காட்டி வருவதால் அவர்களுடன் இணைந்து செயலாற்றப் போவதாக அவர் அறிவிப்பு செய்துள்ளார்.








