Oct 22, 2026
Thisaigal NewsYouTube

ஜண்டா பாய்க்கில் அதிரடிச் சோதனை: 65 வெளிநாட்டினர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜண்டா பாய்க்கில் அதிரடிச் சோதனை: 65 வெளிநாட்டினர் கைது

பகாங், பெந்தோங், ஜண்டா பாய்யிக்கில் குடிநுழைவுத் துறை நடத்திய ஒருங்கிணைந்த சோதனையில், குடிநுழைவுச் சட்டத்தை மீறிய 65 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த நடவடிக்கையில், கம்போங் சும்சும், கம்போங் செரிஙின் ஆகிய பகுதிகளில் உள்ள 19 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 278 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டனர். செல்லுபடியாகும் அனுமதிச்சீட்டு இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டித் தங்கியது உள்ளிட்ட குற்றங்களுக்காக, 20 முதல் 54 வயதுக்குட்பட்ட 9 பெண்கள் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டுமானத் தளங்கள், பண்ணைகள், சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதையில், 150 அதிகாரிகளும் பணியாளர்களும் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் செமிஞ்சி குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், இந்த ஆண்டு முதல் 10 மாதங்களில் நாடு முழுவதும் சுமார் 11,000 சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாகவும், 66,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாகவும் குடிநுழைவுத் துறை துணைத் தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃப்பெண்டி ரம்லி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →