Oct 16, 2026
Thisaigal NewsYouTube

3 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
3 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பெனாம்பாங், டிச. 4-


போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று இரவு 9.13 மணியளவில் சபா, பெனாம்பாங், பெவர்லி ஹில் என்ற இடத்தில் இந்த அதிரடித் தாக்குதல் நடந்தது.

அந்த மூன்று கொள்ளையர்களும், கொலை சம்பவம் உட்பட பல்வேறு கடுங்குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

போலீசாருக்கு கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடமைப்புப்பகுதியில் ஒன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது கொள்ளையர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று டத்தோ அஸ்மி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →