கோலாலம்பூர், நவம்பர்.15-
கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை, இப்போதைக்கு முன்னுரிமையான விவகாரமாகப் பார்க்க வேண்டியதில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசகர் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் லாய் சென் ஹெங் வலியுறுத்தியுள்ளார்.
ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்பதைக் காட்டிலும், நாட்டின் தலைநகராக விளங்கும் கோலாலம்பூர் மாநகரை நிபுணத்துவ முறையில் நிர்வகிப்பதற்கான நிர்வாக முறையில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் மைமூனா ஷாரிஃப், திடீரென்று பணியிடம் மாற்றப்பட்டது, மாநகர் மன்றத்தின் நிலைத்தன்மையற்ற சூழ்நிலையைக் காட்டுகிறது. எனவே ஊராட்சி மன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் மாநகர் மன்றத்தின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று லாய் சென் ஹெங் வலியுறுத்தினார்.








