Apr 19, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸில்  நகைக்கடை கொள்ளை: 12 பேரிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸில் நகைக்கடை கொள்ளை: 12 பேரிடம் விசாரணை

Share:

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தன், சென்ரல் பகுதியில் உள்ள KTV நகைக்கடையில் நேற்று காலையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள் கொள்ளையிட ப்பட்டது தொடர்பில் 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதேவேளையில் கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை கடையின் உரிமையாளர் மற்றும் 10 ஊழியர்கள் உட்பட மொத்தம் 12 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண், வேறொருவருக்குச் சொந்தமான உண்மையான பதிவு எண் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில், நிசான் அல்மேரா காரில் வந்த துப்பாக்கி ஏந்திய நான்கு நபர்கள், பாதுகாவலர்களை அச்சுறுத்தி இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டனர்.

இதில் நகைக்கடையின் பாதுகாவலர் கொள்ளையார்களால் தாக்கப்பட்டுள்ளார்.

Related News

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!