Nov 12, 2025
Thisaigal NewsYouTube
பாதிரியார் காணாமல் போன விசாரணைக்கு துணை ஐஜிபி தலைமையேற்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பாதிரியார் காணாமல் போன விசாரணைக்கு துணை ஐஜிபி தலைமையேற்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைக்குப் போலீஸ் படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை தலைமையேற்க வேண்டும் என்று அந்த பாதிரியாரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது கணவர் காணாமல் போன சம்பவத்திற்குப் போலீஸ் துறை மீண்டும் விசாரணை அறிக்கையைத் திறந்து இருக்கும் பட்சத்தில் அந்த விசாரணைக்கு அயோப் கான் தலைமையேற்க வேண்டும் என்று பாதிரியாரின் மனைவி சுசான்னா லியூ, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தம்முடைய கணவன் தொடர்பான போலீசாரின் மறு விசாரணைக்கு மக்கள் மத்தியில் நேர்மை மற்றும் நம்பிக்கைப் பெற்ற ஒருவர் மட்டுமே தலைமையேற்க வேண்டும் என்று சுசான்னா லியூ அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related News